ராஜலக்ஷ்மி பற்றிய கேள்விகளுக்கு பதில் தெரியாமல் முழிக்கும் மஹா.! செம்ம கடுப்பில் ராஜலக்ஷ்மி.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘மகாநதி’ மற்றும் ‘ஆஹா கல்யாணம்’ தொடரில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாக இருக்கிறது. இரண்டு சீரியல்களின் மகா சங்கமம் நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த வாரத்திற்கான ப்ரோமோவை சீரியல் குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். ‘மகாநதி’ மற்றும் ‘ஆஹா கல்யாணம்’ இரண்டு தொடரிலும் தற்போது ரிசார்ட் ஒன்றிற்கு வருகை தந்திருக்கின்றனர். அங்கு போட்டி ஒன்றே நடந்து வருகிறது. போட்டியில் ஜெயிப்பவர்களுக்கு ஐந்து லட்ச ரூபாய் பரிசு தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. எனவே மகாவும் காவேரியும் இந்த பணத்தை எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ராஜலக்ஷ்மி பற்றிய கேள்விகளுக்கு பதில் தெரியாமல் முழிக்கும் மஹா.! செம்ம கடுப்பில் ராஜலக்ஷ்மி.! 1
இந்த ஐந்து லட்ச ரூபாய் பணம் கிடைத்தால் எப்படியாவது தனது பெற்றவர்களின் கஷ்டத்தை தீர்த்து விடலாம் என்று சொல்லி மகாவும் காவேரியும் திட்டம் தீட்டுகின்றனர். எனவே அவர்களது கணவர்களை வலுகட்டாயமாக இந்த போட்டிகளில் கலந்து கொள்ள வைக்கின்றனர். இரண்டு போட்டிகள் நிறைவடைந்த நிலையில் தற்போது மூன்றாவதாக ஒரு போட்டியில் நடக்க இருக்கிறது. அதில் கணவர்களின் மாமியார்களும், மனைவிகளின் மாமியார்களும் இருவரும் இணைந்து இந்தப் போட்டியில் பங்கெடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.

விளம்பரம்
தொடர்புடையவை  கை இழுக்குதுன்னா டாக்டரை போய் பாருங்க..! ப்ரியங்காவுக்காக சண்டையிட்டு கொள்ளும் ராமர் மற்றும் VTV..!

ராஜலக்ஷ்மி பற்றிய கேள்விகளுக்கு பதில் தெரியாமல் முழிக்கும் மஹா.! செம்ம கடுப்பில் ராஜலக்ஷ்மி.! 3

மாமியார்கள் குறித்து மருமகள்கள் சரியான பதில் கூறவில்லை என்றால் தலையில் தண்ணீர் ஊற்றப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அப்போது மகாவிடம் அவரது மாமனாருக்கும் மாமியாருக்கும் திருமணம் ஆகி எத்தனை ஆண்டுகள் ஆனது? என்று கேட்ட நிலையில் மஹாவுக்கு பதில் தெரியாமல் முழிக்கிறார். எனவே ராஜலட்சுமி தலையில் தண்ணீர் ஊற்றுவார்களா? என்பது தெரியவில்லை. இதனால் புது சண்டை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment