“உன்ன மாமான்னு கூட பாக்க மாட்டேன்” முத்துவை அடிக்கப்போன மீனாவின் தம்பி சத்யா.! முழு எபிசோட்.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலின் இன்றைக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது. அதில் மீனாவின் தம்பி சத்யா முத்துவின் சட்டையை கோர்த்து பிடித்து அடிக்க செல்கிறார். அந்த அதிரடியான திருப்பங்களுடன் இன்றைய எபிசோடு நிறைவடைந்து இருக்கிறது. தமிழ் திரையுலகின் டாப் ஹிட் சீரியலாக இருந்து வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் இன்று என்ன நடந்தது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

"உன்ன மாமான்னு கூட பாக்க மாட்டேன்" முத்துவை அடிக்கப்போன மீனாவின் தம்பி சத்யா.! முழு எபிசோட்.! 1

விளம்பரம்

மீனா அண்ணாமலைக்கு காலையில் காப்பி வந்து கொடுக்கிறார். அப்போது அண்ணாமலையின் தாயார் போன் செய்து பேசுகிறார். வீட்டில் உள்ளவர்களை பற்றி நலம் விசாரிக்கும் பொழுது மீனா வாய் தவறி, அண்ணாமலை மருத்துவமனையில் இருந்த விஷயத்தை கூற முயல்கிறார். ஆனால் அண்ணாமலை அந்த விஷயத்தை சொல்ல வேண்டாம் என்று தடுக்கிறார். தொடர்ந்து முத்துவும் வீட்டிற்கு வந்து பாட்டியிடம் போனில் பேச, அவரும் வாய் தவறி அண்ணாமலை மருத்துவமனையில் இருந்த செய்தியை கூற முயல்கிறார்.

"உன்ன மாமான்னு கூட பாக்க மாட்டேன்" முத்துவை அடிக்கப்போன மீனாவின் தம்பி சத்யா.! முழு எபிசோட்.! 3

விளம்பரம்

அப்போது அண்ணாமலை முத்துவையும் தடுத்து விடுகிறார். தொடர்ந்து நீங்கள் எடுத்துக்கொண்ட குரூப் போட்டோவை எனக்கு அனுப்பி விடு, நான் பிரேம் போட்டு வைத்துக் கொள்கிறேன் என்று பாட்டி சொல்ல, முத்து நானே பிரேம் செய்து அனுப்புகிறேன் என்று சொல்லி கிளம்புகிறார். அப்போது அங்கு ஸ்டுடியோவில் விஜயாவின் புகைப்படத்தை பார்த்த கடைக்காரர் சில நாட்களுக்கு முன்பு விஜயாவிடம் இருந்து காசை பறித்து சென்ற நபர் குறித்த வீடியோவை காட்டுகிறார். அப்போது விஜயாவிடம் இருந்து பணத்தைப் பறித்து சென்றது மீனாவின் தம்பி சத்யா என்கிற உண்மை முத்துக்கு தெரிய வருகிறது.

தொடர்புடையவை  அசீமுக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்த கமல்.! கிப்ட்டை பார்த்து கண்கலங்கிய அசீம்.! என்ன Gift தெரியுமா?

"உன்ன மாமான்னு கூட பாக்க மாட்டேன்" முத்துவை அடிக்கப்போன மீனாவின் தம்பி சத்யா.! முழு எபிசோட்.! 5
சத்யாவின் இந்த செயலை பார்த்த முத்து, கோவமாக மீனாவின் வீட்டிற்கு செல்கிறார். ஆனால் அங்கு சத்யா இல்லை. மீனாவின் அம்மாவும் சீதாவும், “சத்யா தற்போது முன்னர் போல் இல்லை, திருந்தி விட்டான். பார்ட் டைம் ஆக வேலைக்கு செல்கிறான். எங்கள் குடும்பத்தை பார்த்துக் கொள்கிறான்” என்று நெகிழ்ச்சியுடன் பேசுகின்றனர். மேலும் தற்போது சரியாக கல்லூரிக்கு செல்கிறான், நல்ல மதிப்பெண்களும் எடுக்கிறான் என்று அவர்கள் கூறியதைக் கேட்கும் முத்து, சத்யா குறித்த தனது எண்ணத்தை மாற்றிக் கொள்கிறார்.

விளம்பரம்

"உன்ன மாமான்னு கூட பாக்க மாட்டேன்" முத்துவை அடிக்கப்போன மீனாவின் தம்பி சத்யா.! முழு எபிசோட்.! 7

இருப்பினும் அவரை கல்லூரியில் சென்று விசாரிக்க, “சத்யா மூன்று நாட்களாக கல்லூரிக்கு வரவில்லை” என்ற உண்மையை அவரது நண்பர்கள் கூறுகின்றனர். இது ஒரு புறம் இருக்க, மறுபுறம் முத்துவின் நண்பர் செல்வத்துக்கும், சிட்டிக்கும் கைகலப்பு ஏற்படுகிறது. கடன் வாங்கிய விவகாரத்தில் செல்வத்தை சிட்டி அடித்து துவைக்கிறார். அந்த சமயம் முத்து அந்த இடத்திற்கு வர, முத்து சிட்டியை கடுமையாக தாக்குகிறார். இதை கவனித்த சத்யா, “சிட்டி எனது நண்பர், அவரை அடிக்க வேண்டாம்” என்று சொல்லி முத்துவிடம் கேட்கிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  "என்னை அவர் வீட்டு மஹாலக்ஷ்மி என்று தான் அழைப்பார்" ராஜ்கிரண் பற்றி பேசும் போது உடைந்து அழுத ப்ரியா.!

"உன்ன மாமான்னு கூட பாக்க மாட்டேன்" முத்துவை அடிக்கப்போன மீனாவின் தம்பி சத்யா.! முழு எபிசோட்.! 9

ஆனால் முத்து தொடர்ந்து சிட்டியை அடித்து கொண்டிருப்பதால் கோபமடைந்த சத்யா, முத்துவின் சட்டையை கோர்த்து பிடித்து, “உன்னை மாமானு கூட பார்க்க மாட்டேன்” என்று சொல்லி சண்டை போடுகிறார். அத்துடன் இன்றைய எபிசோடு நிறைவடைந்து இருக்கிறது. நாளைய எபிசோடுக்கான முன்னோட்டமும் வெளியாகி இருக்கிறது. அதில் சத்யாவின் கையை திருகி முத்து உடைத்து விடுகிறார். ஆனால் சத்யா பைக்கில் இருந்து கீழே விழுந்து கை உடைந்து விட்டதாக கூறி மருத்துவமனையில் அட்மிட் ஆகிறார். இந்த செய்தியை மீனா போன் செய்த முத்து விடம் கூற, “உன் தம்பி ஏதாவது செய்து கொண்டு வந்து நிற்பான், நான் அதற்காக வந்து நிற்க வேண்டுமா” என்று கோபத்துடன் போனை துண்டிக்கிறார். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment