திருமணமான ஒரே வருடத்தில் கணவரை பிரிந்த ‘ரோஜா’ சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி.? வெளியான தகவல்

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ரோஜா’ சீரியலின் மூலமாக பிரபலமான நடிகை பிரியங்கா நல்காரி, தற்போது தனது கணவரை பிரிந்து விட்டதாக தெரிகிறது. இன்ஸ்டாகிராமில் அவர் செய்த செயலால் ரசிகர்கள் தற்போது இந்த கேள்விகளை எழுப்பி இருக்கின்றனர். ‘ரோஜா’ சீரியலின் மூலமாக ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக வலம் வந்தவர் பிரியங்கா நல்காரி.

திருமணமான ஒரே வருடத்தில் கணவரை பிரிந்த 'ரோஜா' சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி.? வெளியான தகவல் 1

விளம்பரம்

நான்கு வருடங்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘சீதாராமன்’ சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்தார். அந்த சமயம் அவர் தனது காதலர் ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டிருந்தார்.

திருமணமான ஒரே வருடத்தில் கணவரை பிரிந்த 'ரோஜா' சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி.? வெளியான தகவல் 3

விளம்பரம்

ராகுலுடன் ஏற்கனவே பிரியங்காவிற்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்தனர். பின்னர் மீண்டும் காதலிக்க தொடங்கிய இவர்கள், மலேசியாவில் ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு குடும்பத்தினர் கூட கலந்து கொள்ளாமல் இவர்கள் இருவரும் மட்டுமே திருமணத்தை முடித்து இருந்தனர்.

தொடர்புடையவை  நீ பெல்லி டான்ஸ் ஆடு..!போலீசாக வந்து கோமாளிகளை புரட்டி எடுக்கும் ஜோயா..! குக் வித் கோமாளி ப்ரோமோ இதோ..!

திருமணமான ஒரே வருடத்தில் கணவரை பிரிந்த 'ரோஜா' சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி.? வெளியான தகவல் 5

விளம்பரம்

திருமணத்திற்கு பின்னர் குடும்பத்தில் கவனம் செலுத்த இருப்பதாக கூறி ‘சீதாராமன்’ சீரியலை விட்டு பிரியங்கா விலகி இருந்தார். பின்னர் மீண்டும் ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘நளதமயந்தி’ என்கிற சீரியலின் மூலமாக நடிக்கத் தொடங்கி இருந்தார். இந்த நிலையில் தனது கணவருடன் எடுத்துக் கொண்ட ரீல்ஸ் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அனைத்தையும் இன்ஸ்டாகிராமில் இருந்து டெலிட் செய்து இருக்கிறார் பிரியங்கா.

திருமணமான ஒரே வருடத்தில் கணவரை பிரிந்த 'ரோஜா' சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி.? வெளியான தகவல் 7

விளம்பரம்

இதைப் பார்த்த ரசிகர்கள், நீங்கள் இருவரும் பிரிந்து விட்டீர்களா? என்று பிரியங்காவிடம் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் நேற்று இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து வந்தார். அப்போது ரசிகர் ஒருவர், “நீங்கள் இப்போது சிங்கிளாக இருக்கிறீர்களா? என்று கேட்ட நிலையில், அதற்கு “ஆமாம்” என்று பதில் அளித்து இருக்கிறார்.

திருமணமான ஒரே வருடத்தில் கணவரை பிரிந்த 'ரோஜா' சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி.? வெளியான தகவல் 9

விளம்பரம்

 

அதை தனது ஸ்டோரியிலும் அவர் பகிர்ந்திருந்தார். அவரின் இந்த செயல்களால் அவர் கணவரை பிரிந்து விட்டதாகவே தெரிகிறது. ஆனால் அதற்கான காரணம் குறித்து இன்னும் அவர் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. திருமணமான ஒரே வருடத்தில் தனது கணவரை பிரியங்கா பிரிந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment