ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் ‘கள்வன்’ திரைப்படத்திலிருந்து தற்போது “அடி கட்டழகு கருவாச்சி..” என்கிற வீடியோ பாடல் தற்போது வெளியாகி இருக்கிறது. தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் ஜிவி பிரகாஷ் தற்போது படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ‘கள்வன்’ இந்த திரைப்படத்தின் கதையை ரமேஷ் ஐயப்பன் மற்றும் பி.வி சங்கர் ஆகிய இருவரும் எழுதியிருக்கின்றனர். பாரதிராஜா, இவானா, கலக்கப்போவது யாரு தீனா, பட்டிமன்றம் ஞானசம்பந்தம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். டில்லிபாபு தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.
கிராமத்தில் வாழும் இளைஞர்களான தீனாவும், ஜி.வி பிரகாசமும் யானையை வைத்து காரியம் சாதிக்க திட்டம் தீட்டுகிறார்கள்.

ஆனால் அது தந்தம் கடத்தலா? அல்லது வேறு ஏதாவது சட்டவிரோத செயல்களா? என்பது தெரியவில்லை. வருகிற ஏப்ரல் 14ம் தேதி இந்த திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் சமீபத்தில் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பு பெற்றது. தற்போது “அடி கட்டழகு கருவாச்சி..” என்கிற பாடல் வெளியாகி வரவேற்பு பெற்றுள்ளது. நீங்களும் அந்த பாடலைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Think Music India