90களில் முன்னணி நாயகனாக இருந்தவர் ராமராஜன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சாமானியன்’ படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியிருக்கிறது. ரஜினி, கமல், விஜயகாந்த் பல முன்னணி நடிகர்கள் நடித்துக் கொண்டிருந்த காலத்தில் எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல் சுயமாக முன்னுக்கு வந்தவர் நடிகர் ராமராஜன். இவர் நடித்த ‘கரகாட்டக்காரன்’ படம் இன்றளவும் பலராலும் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ராமராஜன் திரைப்படங்களில் நடிக்காமல் பல ஆண்டுகளாக விலகியிருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

12 அண்டுகளுக்குப் பிறகு தற்போது அவர் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘சாமானியன்’ படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியிருக்கிறது. இந்த படத்தில் ராமராஜனுடன் இணைந்து ராதாரவி மற்றும் எம்.எஸ் பாஸ்கர் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த மூன்று பேரும் இணைந்து இந்த சமூகத்திற்கு என்ன செய்கின்றார்கள் என்பது குறித்த படம்தான் ‘சாமானியன்’. இந்தப் படத்தை எக்ஸ்டரா என்டர்டைன்மென்ட் நிறுவனம் சார்பில் மதியழகன் தயாரித்து இருக்கிறார். இயக்குனர் ராகேஷ் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

ராகேஷ் ஏற்கனவே ‘தம்பிக்கோட்டை’, ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். ராஜாமணி இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். அருள்செல்வன் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். தற்போது வெளியாகியிருக்கும் அந்த ட்ரைலரை நீங்களும் காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.! Watch the Below Video.!
YouTube Video Code Embed Credits: Zee Music South