குடும்பத்துடன் சென்று உயர் ரக சொகுசு காரை வாங்கிய விஜே அர்ச்சனா.! வீடியோ உள்ளே.!

சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினியாக வளம் வரும் விஜே அர்ச்சனா தனது கணவர் மற்றும் மகளுடன் சென்று உயர் ரக கார் ஒன்றை வாங்கியிருக்கிறார். அந்த வீடியோவை அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். ‘காமெடி டைம்’ என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலமாக நிகழ்ச்சி தொகுப்பாளியாக அறிமுகமானவர் விஜே அர்ச்சனா. அதன் பின்னர் டிவி நிகழ்ச்சிகள், பேட்டிகள், விருது வழங்கும் நிகழ்ச்சிகள் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். தனது மகள் சாராவுடன் இணைந்து youtube சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

குடும்பத்துடன் சென்று உயர் ரக சொகுசு காரை வாங்கிய விஜே அர்ச்சனா.! வீடியோ உள்ளே.! 1
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளியாக இருந்த அவர், அந்த வேலையை உதறிவிட்டு விஜய் டிவியின் பிக்பாஸ் ஷோவிற்கு சென்றார். ஆனால் அங்கு அவருக்கு நெகட்டிவ் ட்ரோல்கள் மட்டுமே கிடைத்தது. அதன் பின்னர் மீண்டும் ஜீ தமிழுக்கு சென்ற அவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் தற்போது அவர் சமூக வலைதளத்தில் புது வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். தனது மகள் சாரா மற்றும் கணவர் குடும்பத்துடன் சென்று உயர் ரக கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். வீடியோவைப் பகிர்ந்த அவர் உருக்கமாக பதிவிட்டு இருக்கிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  முடிவுக்கு வருகிறது காற்றுக்கென்ன வேலி சீரியல்.! உறுதி செய்த ஹீரோயின் ப்ரியங்கா குமார்.!

குடும்பத்துடன் சென்று உயர் ரக சொகுசு காரை வாங்கிய விஜே அர்ச்சனா.! வீடியோ உள்ளே.! 3

“எனது தங்கையும் நானும் கார் ஓட்டத் தொடங்கிய காலத்தில் இருந்தே எங்கள் அப்பா, பென்ஸ் காரை எங்களுடன் சேர்ந்து ஓட்ட வேண்டும் என்று நினைத்தார். 24 வருடங்கள் அப்பா கண்ட கனவை தற்போது தான் நிறைவேற்ற முடிந்தது. இப்போது எங்கள் அப்பா எங்களுடன் இல்லை. எனவே, தங்கையும், நானும் வானத்தைப் பார்த்து, ‘அப்பா நாங்கள் அதை சாதித்து விட்டோம்’ என்று கத்துகிறோம்” எனச் சொல்லி உருக்கமாக பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment