இனிப்பில் விஷம் தடவி சரஸ்வதி மற்றும் குழந்தையை கொல்ல முயற்சித்த அர்ஜுன்.! ப்ரோமோ இதோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘தமிழும் சரஸ்வதியும்’ தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தற்போது சரஸ்வதிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் சரஸ்வதிக்கு விஷம் கலந்த இனிப்பை கொடுக்க வந்த அர்ஜுனை தமிழ் அடித்து துவைக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இனிப்பில் விஷம் தடவி சரஸ்வதி மற்றும் குழந்தையை கொல்ல முயற்சித்த அர்ஜுன்.! ப்ரோமோ இதோ 1
‘தமிழும் சரஸ்வதியும்’ தொடரில் வில்லனாக இருக்கும் அர்ஜுன் கை எப்போதும் ஓங்கிக் கொண்டே இருக்கிறது. ஆனாலும் அர்ஜுனை வீட்டு விசேஷங்களில் உள்ளே விடுவதும் அவரால் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் ஹீரோ திணறுவதுமாக கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் இப்படியே கதையை நகர்த்துவீர்கள்? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

விளம்பரம்

இனிப்பில் விஷம் தடவி சரஸ்வதி மற்றும் குழந்தையை கொல்ல முயற்சித்த அர்ஜுன்.! ப்ரோமோ இதோ 3
இந்த நிலையில் சரஸ்வதியின் வளைகாப்புக்கு வரும் அர்ஜுன், வீட்டில் பூஜை செய்யப்பட்ட இனிப்பு என்று சொல்லி அதை சரஸ்வதியிடம் கொடுக்குமாறு ராகிணியிடம் கொடுக்கிறார். அந்த சமயம் தமிழுக்கு ஒரு போன் கால் வருகிறது. அப்போது தமிழ் இனிப்பில் விஷம் இருப்பதை தெரிந்து கொண்டு, அர்ஜுனனை அடித்து துவைக்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.! Watch the Below Video.!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment