ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘கனா’ சீரியலில் இருந்து, கதாநாயகி விலகி இருக்கிறார். அந்த தகவல் தற்போது கிடைத்திருக்கிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் தான் ‘கனா’ பிரிந்து இருக்கும் அப்பா – மகள் எப்படி ஒன்று சேர்கிறார்கள்?

ஓட்டப்பந்தய போட்டியில் தடைகளை தாண்டி நாயகி எப்படி சாதிக்கிறார்? என்பது தான் இந்த சீரியலின் கதையாக இருந்து வருகிறது. சீரியலின் கதாநாயகனாக உன்னி கிருஷ்ணனும், கதாநாயகியாக தர்ஷினாவும் நடித்து வருகின்றனர். இதில் தர்ஷனா திருமணம் காரணமாக இந்த சீரியலில் இருந்து விலகப் போவதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், தற்போது அது உண்மையாகி இருக்கிறது.

தர்ஷனா ஏற்கனவே சீரியல் இருந்து வெளியேறி விட்டதாகவும், அவருக்கு பதிலாக தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை டோனிஷா என்பவர் நடிக்க இருப்பதாகவும் இரண்டு நாட்களில் இவர் நடிக்கும் காட்சிகள் இடம் பெறுலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
Youtube Video Embed Code Credits: Zee Tamil