தமிழின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை அமலா பாலுக்கு தற்போது திருமண வளைகாப்பு முடிந்திருக்கிறது. இந்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இயக்குனர் ஏ.எல் விஜய்யும் அமலாபாலும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

ஆனால் திருமணமான நான்கே ஆண்டுகளில் அவர்கள் பிரிந்து விட்டனர். பிரிவுக்குப் பின்னர் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஜெகத் தேசாய் என்பவரை காதலிப்பதாக சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து அறிவித்திருந்தார். காதலனை அறிமுகப்படுத்திய ஒரே வாரத்தில் அவருடன் திருமணத்தையும் முடித்திருந்தார்.

ஜெகத் தேசாய் மற்றும் அமலாபால் இருவரின் திருமணம் கொச்சியில் வைத்து நடைபெற்றது. உறவினர்கள் மற்றும் கலந்து கொண்ட இந்த திருமணத்தை மிக எளிமையாக நடத்தி இருந்தார் அமலாபால்.

இந்த நிலையில் அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்து முடிந்திருக்கிறது. கேரளாவில் பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற இந்த வளைகாப்பு புகைப்படங்களை அமலா பால் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.