முடிவுக்கு வருகிறது ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியல்.! கடைசி நாள் ஷூட்டிங்கில் இருந்து வெளியான வீடியோ.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியல் தற்போது முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த நாடகத்தில் நடிக்கும் நடிகர்கள் சிலர் கடைசி நாள் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து இருக்கின்றனர். இதனால் இந்த சீரியல் முடிவுக்கு வருவது தற்போது உறுதியாகி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2021ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் ஒரு டாப் ஹிட் சீரியல் தான் ‘தமிழும் சரஸ்வதியும்’. இதில் தீபக் ஹீரோவாக நடிக்க, நட்சத்திரா நாகேஷ் ஹீரோயினாக நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் மீரா கிருஷ்ணன், சங்கீதா, நவீன் வெற்றி, ரயான் போன்ற பலர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முடிவுக்கு வருகிறது 'தமிழும் சரஸ்வதியும்' சீரியல்.! கடைசி நாள் ஷூட்டிங்கில் இருந்து வெளியான வீடியோ.! 1

விளம்பரம்

தற்போது கதைப்படி தமிழ் மற்றும் அவரது தங்கை ராகிணி குடும்பத்திற்கு ஏழாம் பொருத்தமாக இருந்து வருகிறது. ராகிணி தனது கணவருக்கு ஆதரவாக பிறந்த வீட்டை எதிர்த்து வருகிறார். இந்த நிலையில் இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ராகிணி தமிழின் குழந்தையை காப்பாற்றி கொடுத்திருக்கிறார். ஆபத்தான கட்டத்தில் அனுமதிக்கப்பட்ட தமிழின் மனைவி சரஸ்வதிக்கு பிரசவம் பார்த்து வெற்றிகரமாக குழந்தையை பெற்றெடுத்து கொடுத்திருக்கிறார். மேலும் அர்ஜுனனுக்கும் நினைவு திரும்பி தனது மாமா தான் தன்னை தாக்கி கோமா நிலைக்கு அனுப்பிவிட்ட உண்மையை கூறுகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamil Serials (@tamilserialexpress)

விளம்பரம்

இதனால் இந்த கதை முடிவை நெருங்குவதை ரசிகர்கள் தற்போது தெரிந்து கொண்டனர். நிலைமை இப்படி இருக்க இந்த சீரியலில் வசு என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை சங்கீதா கடைசி நாள் ஷூட்டிங் அட்டவணை என்று சில வீடியோக்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் சரஸ்வதியாக நடித்து வரும் நட்சத்திரா மற்றும் மாமியாராக நடித்து வரும் மீரா கிருஷ்ணன் இருவரையும் மிகவும் மிஸ் செய்கிறேன் என்று பகிர்ந்து இருக்கிறார். அந்த வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்

Leave a Comment