‘GOAT’ படத்திலிருந்து பர்ஸ்ட் சிங்கிள் பாடல் ‘விசில் போடு’ வெளியானது.! வீடியோ உள்ளே

தளபதி விஜயின் நடிப்பில் உருவாகி வரும் ‘கோட்’ திரைப்படத்திலிருந்து தற்போது முதல் சிங்கிள் பாடலான “விசில் போடு..” என்கிற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடலில் விஜயுடன் இணைந்து நடிகர் பிரசாந்தும் குத்தாட்டம் போட்டிருக்கிறார். இந்த காணொளி தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்து வரும் திரைப்படம்தான் இந்த ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. இதில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

'GOAT' படத்திலிருந்து பர்ஸ்ட் சிங்கிள் பாடல் 'விசில் போடு' வெளியானது.! வீடியோ உள்ளே 1
விஜயுடன் இணைந்து நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், சினேகா, லைலா, அஜ்மல், மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி அமரன், யுகேந்திரன், வைபவ் என மிகப் பெரிய நடிகர் பட்டாளமே நடித்து வருகின்றனர். ஆரம்பத்தில் அட்லி தான் இந்த படத்தை இயக்குவதாக இருந்தது. பின்னர் சில காரணங்களால் அது வெங்கட் பிரபுவின் கைகளுக்கு மாறிப்போனது. சென்னை, தாய்லாந்து, ஹைதராபாத், ஸ்ரீலங்கா, புதுச்சேரி, திருவனந்தபுரம், ரஷ்யா போன்ற பல பகுதிகளில் படத்தின் படப்பிடிப்புகள் நடந்து முடிந்திருக்கிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது.

விளம்பரம்
தொடர்புடையவை  முதல்நாளே கோடிகளை குவித்த தங்கலான்..! படக்குழுவே வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு..! கொண்டாட்டத்தில் விக்ரம் ரசிகர்கள்..!

'GOAT' படத்திலிருந்து பர்ஸ்ட் சிங்கிள் பாடல் 'விசில் போடு' வெளியானது.! வீடியோ உள்ளே 3
இந்த நிலையில் படத்திலிருந்து ஒவ்வொரு அப்டேட்டுகளாக வெளிவர தொடங்கி இருக்கிறது. அதன்படி இன்று முதல் சிங்கிள் பாடலான “விசில் போடு..” வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இதன் லிரிக்கல் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: T-Series Tamil

விளம்பரம்

Leave a Comment