தமிழ் திரையுலகில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் இயக்குனர் சங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கு இன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது.

இந்த திருமணத்தில் பிரபலங்கள் பலரும் நேரில் கலந்து கொண்டு வாழ்த்தி இருக்கின்றனர்.

தற்போது ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார் இயக்குனர் சங்கர். இவரது மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருந்தது.

ஆனால் அவர் போக்சோ சட்டத்தில் கைதானதால் அவரை விவாகரத்து செய்துவிட்டு தற்போது இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா.

இந்த திருமணத்தை சங்கர் பிரம்மாண்டமான முறையில் நடத்தியிருக்கிறார்.

முதலமைச்சர் மு.க ஸ்டாலின், கமலஹாசன், ரஜினிகாந்த், சியான் விக்ரம், சூர்யா, அட்லி உள்ளிட்ட பலரும் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தனர்.

அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியிருக்கிறது.

பலரும் புதுமண தம்பதிகளுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
