விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலிலிருந்து நடிகர் ஒருவர் விலகி இருக்கும் அதிர்ச்சி தகவல் தற்போது கிடைத்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக விஜய் தொலைக்காட்சியில் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி, மக்களின் மனம் கவர்ந்த தொடராக இருந்து வருகிறது ‘பாக்கியலட்சுமி’ தொடர்.

ஒரு குடும்பத் தலைவியாக இருந்து கொண்டு கணவர், மாமியார், பிள்ளைகள் அனைவரையும் சமாளித்து ஒரு பெண் எப்படி வாழ்க்கையில் முன்னேறுகிறார் என்கிற கதையை அடிப்படையாக வைத்து இந்த கதை ஒளிபரப்பாகி வருகிறது. கணவரின் இரண்டாம் திருமணம் துரோகம், பிள்ளைகளின் வாழ்க்கையில் ஏற்படும் பூகம்பத்தை எப்படி பாக்கியா சமாளிக்கிறார் என்பதுதான் இந்த கதையின் மையக்கரு.

மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வருவதால் இந்த சீரியலில் நடித்துவரும் நடிகர்கள் பலரும் விலகி வருகின்றனர். அமிர்தா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரித்திகா, செழியன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஆர்யன் உள்ளிட்டோர் முன்பே இந்த சீரியலில் இருந்து விலகி இருந்தனர். அதேபோல் ஜெனியின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகரும் மாற்றப்பட்டிருந்தார்.

அமிர்தாவின் முன்னாள் கணவராக நடித்தவரும் மாற்றப்பட்டு இருந்தார். இப்படியாக மாறுதல்களை சந்தித்து வரும் இந்த சீரியலில் தற்போது மிகப்பெரிய அதிர்ச்சியாக எழில் கதாபாத்திரத்தில் நடித்து வரும் வி.ஜே விஷால் விலகி இருக்கும் தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கின்றனர். அவர் ஏன் சீரியலை விட்டு விலகினார் என்பது குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவருக்கு பதிலாக ‘ஈரமான ரோஜாவே சீசன் 2’ சீரியலில் அர்ஜுன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் நவீன் புதிய எழிலாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அவர் நடிக்கும் எபிசோடு இன்று முதல் ஒளிபரப்பாகும் என கூறப்பட்டுள்ளது. இது ‘பாக்கியலட்சுமி’ சீரியல் ரசிகர்களுக்கு பெயர் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
View this post on Instagram