மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 0.08% நீதித்துறைக்கு: அறிக்கை

மோசமான நிதி ஒதுக்கீட்டினால் இந்தியாவின் நீதித்துறை பாதிப்படைந்துள்ளது என சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. போதிய அளவில்லாத ஒதுக்கீடுகள், மோசமான திட்டமிடல் மற்றும் நிதிகளின் பயனற்ற தன்மை போன்றவற்றால் நீதி அமைப்பின் திறன் மற்றும் அதன் செயல் மேம்பாடும் பாதித்துள்ளன.

2011-12 மற்றும் 2014-15 ஆகிய ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அறிக்கைகளை ஆராய்ந்த டாடா டிரஸ்ட் நிறுவனம், இந்தியாவில் டெல்லியை தவிர வேறு எந்த மாநிலமும் 1 சதவிகிதம் கூட நீதித்துறைக்காக செலவிடவில்லை தெரிவித்துள்ளது. அதே போல, சட்ட உதவிக்காக வருடாந்த தனிநபர் செலவினம் வெறும் 75 பைசா மட்டுமே செலவிடப்படுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கிறது.

விளம்பரம்

காவல்துறை, சிறைச்சாலைகள் மற்றும் சட்ட உதவி ஆகியவற்றிற்கான செலவு மாநிலங்களுக்கு இடையில் வேறுபடுகிறது. காவல்துறைக்கான வரவுசெலவுத்திட்டங்கள் சராசரியாக 3-5 சதவிகிதங்கள் மாநில செலவினங்களைக் கொண்டிருந்தாலும், மாநிலங்கள் மற்றும் யூ.டி.க்கள் அனைத்திற்கும் சராசரி சிறை வரவு செலவுத் திட்டங்கள் 0.2 சதவிகிதம் மட்டுமே.

தொடர்புடையவை  டெல்லியில் கடுமையான காற்று மாசுபாடு!!

அரசுகளின் மோசமான நிதி ஒதுக்கீடுகளால் நீதித்துறை பலவிதமான தடைகளை சந்திப்பதாக ஆய்வின் முடிவுகள் உணர்த்துகின்றன. அதேபோல காவல்துறையில் வாகனங்கள், எரிபொருள், கணினிகள் மற்றும் எழுதுபொருள் போன்ற அடிப்படை உள்கட்டமைப்புகள் போதுமான அளவிற்கு இல்லாமல் இருக்கிறது.

விளம்பரம்

மேலும், நாடு முழுவதும் உள்ள 665 மாவட்ட நீதிமன்றங்களில் 80 சதவிகிதம் வரையில் கழிவறைகள் கிடையாது. மேலும் சில இடங்களில் கழிவறைகள் இருக்கின்ற போதும் வெறும் 40 சதவிகிதங்கள் மட்டுமே பயன்படுத்துமளவிற்கு உள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது.

விளம்பரம்

Leave a Comment