மாணவர்களே சோர்வடைய வேண்டாம் துணையாக இருக்கிறோம்: இஸ்லாமியா துணைவேந்தர்!

டெல்லியின் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாவனவர்கள் காவல்துறையால் தாக்கப்பட்டதற்கு எதிராக, அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நஜ்மா அக்தர் கருத்து தெரிவித்துள்ளார்.

தேசியா குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. வடகிழக்கு மாநிலங்களில் போராட்டக்காரர்களை மிருக்கத்தனமாக தாங்கிவரும் இராணுவத்தை எதிர்த்து டெல்லியில் இயங்கி வரும் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாவனவர்கள் பேரணியில் ஈடுபட்டனர்.

விளம்பரம்
மாணவர்களே சோர்வடைய வேண்டாம் துணையாக இருக்கிறோம்: இஸ்லாமியா துணைவேந்தர்! 1
ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாவனவர்களின் பேரணி

பேரணியில் கலவரம் ஏற்படவே, காவல்துறை மாணவர்கள் மீது தடியடி நடத்தியது. இதனால் கூட்டம் கலைந்து மாணவர்கள் பல்கலைகழகத்திற்குள் ஓடி ஒழிந்து கொண்டனர். ஆனால் விடாது காவல்துறை, பல்கலைக்கழகத்திற்குள் புகுந்து மாணவர்களை சரமாரியாக தாக்கினர். இந்த கொடூர செயலினால், மாணவர்கள் பலர் படுகாயம் அடைந்தனர். காவல்துறையின் இத்தகைய மனிதநேயமற்ற போக்கு நாடடையே உலுக்கியது.

மாணவர்களே சோர்வடைய வேண்டாம் துணையாக இருக்கிறோம்: இஸ்லாமியா துணைவேந்தர்! 3
நஜ்மா அக்தர்

இது தொடர்பாக வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ள இஸ்லாமியா பல்கலைக்கழக துணைவேந்தர் நஜ்மா அக்தர், எனது மாணவர்களை காட்டுமிராண்டிகளை போல நடத்தியதைக் கண்டு நான் மிகவும் வருந்துகிறேன். காவல்துறையினர் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து, நூலகத்தில் படித்துக்கொண்டிருந்த மாணவர்களிடம் நடந்துக் கொண்ட விதம் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இத்தகைய கடினமான போராட்ட நேரத்தில் மாணவர்கள் மட்டும் தனியாக களத்தில் இல்லை என்பதை தெரியப்படுத்திக்கொள்கிறேன். நானும், பல்கலைக்கழகமும் மாணவர்களுக்கு துணையாக நிற்கிறது. இந்த விவகாரத்தை முடிந்த அளவிற்கு மெனெடுத்து செல்கிறேன். நீங்கள் தனியாக இல்லை, ஒருபோதும் சோர்வடைய வேண்டாம்” என மாணவர்களின் போராட்டத்திற்கு துணை இருப்பதாக தெரிவித்துள்ளார்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment