ஹாரிஷ் இசையில் BROTHER படத்தின் “மக்காமிஷி” முதல் பாடல் வெளியாகியது

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. தனி ஒருவன் படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக உருவெடுத்தார் ஜெயம் ரவி. தொடர்ந்து நல்ல கதைகளை கேட்டு நடித்து வந்தாலும் சில தோல்வி படங்கள் இவருக்கு தவிர்க்க முடியாமல் அமைந்து வருகிறது. அண்மையில் இவர் நடிப்பில் வெளியான இறைவன், சைரன் போன்ற படங்கள் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுக்கொடுக்கவில்லை. பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு வெற்றிக்காக நடிகர் ஜெயம் ரவி போராடி வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஹாரிஷ் இசையில் BROTHER படத்தின் "மக்காமிஷி" முதல் பாடல் வெளியாகியது 1

விளம்பரம்

இவர் தற்போது இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் பிரதர் படத்தில் நடித்துள்ளார். பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கிறார். இதனால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் சற்று அதிகமாகி இருக்கிறது. இப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது.

ஹாரிஷ் இசையில் BROTHER படத்தின் "மக்காமிஷி" முதல் பாடல் வெளியாகியது 3

விளம்பரம்

பாடலாசிரியர் பால் டப்பா எழுதி பாடி இருக்கும் மக்காமிஷி பாடலை படக்குழு வெளியிட்டு உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஹரிஷ் இசையில் வெளியாகும் பாடல் என்பதால் எதிர்பார்ப்பு சற்று அதிகமாகி இருக்கிறது.தற்போது வெளியான முதல் பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.

தொடர்புடையவை  ஆலியா மானசா நடிக்கும் புது சீரியல் ப்ரோமோ.! அடுத்த வாரத்தில் இருந்து எத்தனை மணிக்கு தெரியுமா?

விளம்பரம்

Embed Video Credits : THINK MUSIC INDIA

விளம்பரம்

Leave a Comment