நடிகர் சூர்யா இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். பிரம்மாண்ட பொருட்செலவில் 3டி தொழில்நுட்பத்தில் இப்படம் உருவாகி வருகிறது. ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக திஷா பட்டாணி மற்றும் வில்லனாக பாபி தியால் நடித்து உள்ளார்.

உலகம் முழுவதும் பத்து மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்திற்கு சூர்யா ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. நாளை சூர்யாவின் பிறந்தநாள் என்பதால் இப்படத்தில் இடம்பெற்றுள்ள முதல் பாடலை நாளை காலை 11 மணிக்கு படக்குழு வெளியிட உள்ளதாக அறிவித்து உள்ளது. இந்த அறிவிப்பு சூர்யா பிறந்தநாளுக்கு அவரது ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் ஆக அமைந்து உள்ளது.

இப்படத்தில் கேமியா கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யாவின் தம்பி நடிகர் கார்த்தி நடித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று இந்த காட்சியின் படப்பிடிப்பு படமாக்க பட்டு உள்ளது. இதன் மூலம் இயக்குனர் சிறுத்தை சிவாவின் சினிமெட்டிக் யுனிவர்ஸ் ஆரம்பமாகி இருப்பதாக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.