பிரம்மாண்டத்திற்கு பெயர் போன இயக்குனர் என்றால் அது ஷங்கர் தான். அந்தளவிற்கு தனது படங்களில் பிரம்மாண்டத்தை கொண்டு வந்து மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வைத்து இருப்பார். படத்தில் கதாநாயகன் என்பதை தாண்டி இவரின் இயக்கத்திற்கே மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. மிகப்பெரிய வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்து பல நடிகர்களை உச்ச நடிகர்களாக மாற்றியவர் ஷங்கர்.

இவர் நடிகர் கமலஹாசனை வைத்து இயக்கிய படம் தான் இந்தியன். இப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இதில் வரும் இந்தியன் தாத்தா கதாபாத்திரத்திற்கு மாபெரும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. பல வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாவது பாகத்தை தற்போது ஷங்கர் இயக்கி வெளியிட்டு உள்ளார். இப்படத்தின் மூன்றாவது பாகத்தையும் எடுத்து அடுத்த ஆண்டு வெளியிட தயாராக உள்ளார் ஷங்கர்.

இந்தியன் 2 பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகிய நிலையில், ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிருப்தியை கொடுத்துவிட்டது. இந்நிலையில் இப்படம் வெளியாகி 11 நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ.51.75 கோடி வசூலை பெற்று உள்ளது. இது இப்படத்திற்கு மிகவும் குறைவான வசூல் ஆகும். இதனால் படக்குழு கடும் சோகத்தில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.