தமிழ் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி தான். அந்த நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் தனது வசம் இழுத்து இருக்கிறது இந்த நிகழ்ச்சி. இதுவரை நான்கு சீசன்களை வெற்றிகரமாக கடந்த குக் வித் கோமாளி தற்போது 5வது சீசனில் அடியெடுத்து வைத்து இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மற்ற சீசன்களை போல இந்த சீசன்களிலும் நகைச்சுவைக்கு குறையில்லாமல் கோமாளிகள் அனைவரையும் சிரிக்க வைத்து வருகின்றனர். இந்த சீசனில் போட்டியாளர்களாக அக்ஷய் கமல், ஷாலின் ஜோயா, விடிவி கணேஷ், சூப்பர் சிங்கர் பூஜா, யுடியூபர் இர்பான்,திவ்யா துரை சாமி, தொகுப்பாளினி பிரியங்கா , இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா கலந்துகொண்டு உள்ளனர்.

மேலும் இந்த சீசனில் கோமாளியாக அன்ஷிதா, ஷப்னம், கெமி ஆகியோர் களம் இறங்கி உள்ளனர். நடுவராக செப் தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோர் கலந்துகொண்டு உள்ளனர். தற்போது இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில் சரண்யா பொன்வண்ணன் சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சிக்கு வருகை தந்து குக்குகள் உடன் கலாட்டா செய்து உள்ளார்.
Embed Video Credits : VIJAY TELEVISION