விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் ரியாலிட்டி நிகழ்ச்சியில் முன்னணி நிகழ்ச்சி குக் வித் கோமாளி. தற்போது வரை 4 சீசன்கள் முடிந்த நிலையில் 5வது சீசனில் அடியெடுத்து வைத்து வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது குக் வித் கோமாளி. இந்த சீசனில் செப் வெங்கடேஷ் பட்க்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் வருகை தந்து உள்ளார். மேலும் போட்டியாளர்களாக அக்ஷய் கமல், ஷாலின் ஜோயா, விடிவி கணேஷ், சூப்பர் சிங்கர் பூஜா, யுடியூபர் இர்பான்,திவ்யா துரை சாமி, தொகுப்பாளினி பிரியங்கா , இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா ஆகியோர் கலந்துகொண்டு உள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை ஸ்ரீகாந்த் தேவா மற்றும் வசந்த் வசி எலிமினேட் ஆகியுள்ளனர். இந்த சீசனில் புதிய கோமாளியாக கெமி, அன்ஷிதா, பரீனா, ஷபனம் ஆகியோர் கலந்துகொண்டு உள்ளனர். வாரம் வாரம் புதிய புதிய முறையில் நிகழ்ச்சியை நடத்தி மக்களை மகிழ்வித்து வருகின்றனர் குக் வித் கோமாளி. இந்த வார நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகி உள்ளது.

இந்த வாரம் சிறப்பு விருந்தினர்களாக விஜய் ஆண்டனி மற்றும் சரண்யா பொன்வண்ணன் கலந்துகொண்டு உள்ளனர்.கோமாளிகள் அனைவரும் பிரபல நட்சத்திரங்களில் கதாபாத்திரங்களாக உடையணிந்து வந்து கலக்கி வருகின்றனர். இந்த வாரம் எலிமினேஷன் சுற்று என்பதால் போட்டியாளர்கள் அனைவரும் உச்சகட்ட பயத்தில் உள்ளனர். ப்ரோமோ ரசிகர்களிடம் எதிர்பார்ப்பினை அதிகரித்து உள்ளது.
Embed Video Credits : VIJAY TELEVISION