குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களிடம் பிரபலமான நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக அறிமுகம் ஆகிய பிரபலங்கள் மக்கள் மத்தியில் பிரபலம் ஆகி உள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. தற்போது நான்காவது சீசன் முடிந்து ஐந்தாவது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

மற்ற சீசன்களை போல இந்த சீசன்களிலும் நகைச்சுவைக்கு குறையில்லாமல் கோமாளிகள் அனைவரையும் சிரிக்க வைத்து வருகின்றனர். இந்த சீசனில் போட்டியாளர்களாக அக்ஷய் கமல், ஷாலின் ஜோயா, விடிவி கணேஷ், சூப்பர் சிங்கர் பூஜா, யுடியூபர் இர்பான்,திவ்யா துரை சாமி, தொகுப்பாளினி பிரியங்கா , இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா கலந்துகொண்டு உள்ளனர்.

மேலும் இந்த சீசனில் கோமாளியாக அன்ஷிதா, ஷப்னம், கெமி ஆகியோர் களம் இறங்கி உள்ளனர். தற்போது அன்ஷிதா, ரக்ஷன், ப்ரியங்கா மற்றும் சுனிதா அனைவரும் ஒன்றாக டூர் சென்றுள்ளார்கள். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
