குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு என மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. தற்போது 4வது சீசன் வரை முடிந்த இந்த நிகழ்ச்சி 5வது சீசனை தொடங்கி மக்கள் ஆதரவுடன் வெற்றிநடைபோடுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் இருப்பதே மிகப்பெரிய பலமாக அமைந்து இருக்கிறது. வாரம் வாரம் புதிய கான்செப்ட் உடன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை நடத்தி மக்களை கவர்ந்து வருகிறது படக்குழு.

இந்த சீசனில் போட்டியாளர்களாக அக்ஷய் கமல், ஷாலின் ஜோயா, விடிவி கணேஷ், சூப்பர் சிங்கர் பூஜா, யுடியூபர் இர்பான்,திவ்யா துரை சாமி, தொகுப்பாளினி பிரியங்கா , இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா கலந்துகொண்டு உள்ளனர். இந்த வார எலிமினேஷன் சுற்று என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகி இருக்கிறது.

இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஸ்ரீகாந்த் மற்றும் வசந்த் வசி வெளியேறி இருக்கும் நிலையில், இந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்று ஜோயா வெளியேறி உள்ளார். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்து உள்ளது. நிகழ்ச்சியில் அதிக குறும்பு தனம் செய்யும் ஜோயா வெளியேறி இருப்பதால் போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகளுமே கவலை அடைந்து உள்ளனர்.