இரண்டு நாள் முடிவில் பாக்ஸ் ஆபிஸை நொறுக்கிய ராயன்..! அள்ளிக்குவித்த வசூலின் முழு விபரம் இதோ..!

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் சினிமாவுக்குள் களம் இறங்கியவர் நடிகர் தனுஷ். இப்படத்திற்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் கதாநாயகனாக நடித்து வந்தார். இவர் நடித்த காதல் கொண்டேன் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது. தொடர்ந்து படங்களில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார் தனுஷ். முன்னணி நடிகராக வலம் வந்த இவரை உச்ச நடிகராக மாற்றிய படம் மூன்று.

இரண்டு நாள் முடிவில் பாக்ஸ் ஆபிஸை நொறுக்கிய ராயன்..! அள்ளிக்குவித்த வசூலின் முழு விபரம் இதோ..! 1

விளம்பரம்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகிய இப்படத்திற்கு அனிருத் முதல் முறையாக இசையமைத்து இருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற கொலவெறி பாடல் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது. உலகளவில் பாடல் வைரலாகியதை தொடர்ந்து தனுஷ் மிகப்பிரபலம் ஆகினார். பின்னர் பாலிவுட் சென்ற இவர் தற்போது ஹாலிவுட் படங்களிலும் நடித்து உள்ளார்.

இரண்டு நாள் முடிவில் பாக்ஸ் ஆபிஸை நொறுக்கிய ராயன்..! அள்ளிக்குவித்த வசூலின் முழு விபரம் இதோ..! 3

விளம்பரம்

தனுஷ் தனது 50வது படமான ராயன் படத்தினை இயக்கி நடித்து உள்ளார். சன் பிக்சர் தயாரிப்பில் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடைபோட்டு வருகிறது. தற்போது இப்படம் இரண்டு நாட்கள் முடிவில், தமிழகத்தில் மட்டும் 20கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் உலகளவில் ரூ.46 கோடி வரை வசூல் செய்து உள்ளதாம்.

விளம்பரம்

Leave a Comment