விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் சிறகடிக்க ஆசை. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது . பல குடும்ப தலைவிகளை ரசிகர்களாக கொண்டு இந்த தொடர் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது . நாளுக்கு நாள் தொடரின் விறுவிறுப்பு அதிகரித்து வருகிறது. கிரிஷை வைத்து ரோகிணி வாழ்க்கையில் மிகப்பெரிய பூகம்பம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கிரிஷை தத்தெடுக்க முத்து மற்றும் மீனா ஆர்வமாக உள்ளனர். அதற்கு விஜயா எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதனால் விஜயாவை எதிர்த்து முத்து கிரிஷை தத்தெடுக்க உள்ளதாக கூறுகிறார். இதனால் நாடகத்தில் அடுத்து என்ன நடக்கும் என எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது . தற்போது புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியுள்ளது .

ப்ரோமோவில் , மீண்டும் மாணவர்களுக்கு நடனம் சொல்லி கொடுக்க தொடங்கி இருக்கிறார் விஜயா . இதனை கண்டு ரசிகர்கள் அனைவரும் சிரித்தும் , விஜயாவை கலாய்த்தும் வருகின்றனர் .
Embed Video Credits : VIJAY TELEVISION