என்ன மனுஷன்யா..! வயநாடு மக்களுக்கு நிதியுதவியை அள்ளிக்கொடுத்த நடிகர் பிரபாஸ்..! எவ்வளவு தெரியுமா?

கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் பெய்த கனமழையால் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலச்சரிவில் பல மக்கள் சிக்கி படுகாயமடைந்து உள்ளனர். இந்த நிலச்சரிவில் 300க்கு மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். அங்கு மீட்பு பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பல நட்சத்திரங்கள் கேரளாவிற்கு தங்களால் முடிந்த நிதி உதவிகளை வழங்கி வருகின்றனர்.

என்ன மனுஷன்யா..! வயநாடு மக்களுக்கு நிதியுதவியை அள்ளிக்கொடுத்த நடிகர் பிரபாஸ்..! எவ்வளவு தெரியுமா? 1

விளம்பரம்

அதன்படி நடிகர் விக்ரம் 20 லட்ச ரூபாய் அளித்து இருந்தார். அதேபோல நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் 20 லட்ச ரூபாய் கொடுத்து உள்ளனர். மேலும் நடிகர் சூர்யா ஜோதிகா கார்த்தி ஆகியோர் இணைந்து 50 லட்ச ரூபாய் வழங்கி உள்ளனர். தொடர்ந்து சினிமா நடிகர்கள் வயநாட்டிற்கு தங்களது ஆதரவுகளை மற்றும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

என்ன மனுஷன்யா..! வயநாடு மக்களுக்கு நிதியுதவியை அள்ளிக்கொடுத்த நடிகர் பிரபாஸ்..! எவ்வளவு தெரியுமா? 3

விளம்பரம்

அந்த வகையில் நடிகர் பிரபாஸ் 2கோடி ரூபாய் நிதியை கேரளாவுக்கு வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பிரபாஸின் இந்த செயலை ரசிகர்கள் பெருமையாக பேசி பாராட்டி வருகின்றனர்.

விளம்பரம்

Leave a Comment