குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு என மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. தற்போது 4வது சீசன் வரை முடிந்த இந்த நிகழ்ச்சி 5வது சீசனை தொடங்கி மக்கள் ஆதரவுடன் வெற்றிநடைபோடுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் இருப்பதே மிகப்பெரிய பலமாக அமைந்து இருக்கிறது. வாரம் வாரம் புதிய கான்செப்ட் உடன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை நடத்தி மக்களை கவர்ந்து வருகிறது படக்குழு. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த சீசனில் போட்டியாளர்களாக அக்ஷய் கமல், ஷாலின் ஜோயா, விடிவி கணேஷ், சூப்பர் சிங்கர் பூஜா, யுடியூபர் இர்பான்,திவ்யா துரை சாமி, தொகுப்பாளினி பிரியங்கா , இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா கலந்துகொண்டு உள்ளனர். இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஸ்ரீகாந்த் மற்றும் வசந்த் வசி , ஜோயா ஆகியோர் வெளியேறி உள்ளனர்.

இந்த வார நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகி உள்ளது. ப்ரோமோவில் , நடுவர்களை டம்மி பீஸ் என வேறு நிகழ்ச்சியில் கூறியதை குறும்படமாக மணிமேகலைக்கு போட்டு காண்பித்து உள்ளனர். இதனால் செப் தாமு மணிமேகலை இனி தொகுப்பாளினி கிடையாது என கூறி கலாய்க்கிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது.
Embed Video Credits : VIJAY TELEVISION