தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் பிரசாந்த். பல வெற்றிப்படங்களை சினிமாவில் கொடுத்து முன்னணி நடிகராக வலம் வந்தார் இவர். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் தற்போது வரை இருக்கிறது. இவருக்கு சினிமாவில் ஆண் ரசிகர்களை விட பெண் ரசிகர்களே அதிகம் காரணம் இவர் சாக்லேட் பாய் என்பதால். மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை கொண்டு சினிமாவில் உச்சத்தில் இருந்த இவர் ஒருகட்டத்தில் மிகப்பெரிய சறுக்கலை சந்தித்தார்.

தொடர்ந்து தோல்விப்படங்களை கொடுத்ததால் பட வாய்ப்புகளை இழந்தார் பிரசாந்த். எதிர்பாராத விதமாக சினிமாவை விட்டு விலகி இருந்த இவர் மீண்டும் அந்தகன் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார் . தியாகராஜன் இப்படத்தினை இயக்கி தயாரித்தும் உள்ளார். நீண்ட நாட்களாக இப்படம் வெளிவராமல் இருந்து ரசிகர்களுக்கு தொடர் ஏமாற்றத்தை கொடுத்து இருந்தது.

தற்போது பெரிய இடைவெளிக்கு பிறகு இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. மேலும் வசூலிலும் நல்ல வரவேற்பினை இப்படம் பெற்று இருக்கிறது. வெளியாகி இரண்டு நாட்களில் இதுவரை இப்படம் ரூ.2.1 கோடி வசூலை பெற்று இருக்கிறது.