தமிழ் சினிமாவுக்கு இசையமைப்பாளராக அறிமுகமாகியவர் ஹிப் ஹாப் ஆதி. இவரின் இசைக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது. பல வெற்றி பாடல்களையும் தமிழ் சினிமாவில் கொடுத்து உள்ளார். இவரின் ஆல்பம் சாங்கிற்கு ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இசையமைப்பாளராக இருந்த ஹிப் ஹாப் ஆதி மீசையை முறுக்கு படத்தினை இயக்கி நடித்து ஒரே நேரத்தில் இயக்குனர் மற்றும் நடிகர் அவதாரத்தினை எடுத்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு கடைசி உலக போர் என்ற படத்தினை இயக்கி உள்ளார். இப்படத்தில் நாயகியாக அனகா நடித்து உள்ளார். மேலும் இப்படத்தில் நட்ராஜன், முனீஸ்காந்த், சிங்கம்புலி என பெரும் நட்சத்திரங்கள் பட்டாளங்கள் நடித்து உள்ளது. ஹிப் ஹாப் ஆதியே இயக்கி இருக்கும் இப்படத்திற்கு அவரே தனது இசையை கொடுத்து அசத்தி இருக்கிறார்.

இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி அண்மையில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது. இந்நிலையில் இன்று சுதந்திரத்தினத்தை முன்னிட்டு தற்போது இப்படத்தின் குட்டி டீசரை வெளியிட்டு வாழ்த்து கூறி உள்ளது படக்குழு. இப்படத்தின் குட்டி டீசர் மற்றும் அதில் வரும் சுதந்திர சுவாசம் பாடல் ரசிகர்களை நெகிழ வைத்து இருக்கிறது. பலரும் இப்படத்தை காண ஆவலாக இருப்பதாக கருத்துக்களை கூறி வருகின்றனர்.
Embed Video Credits : THINK MUSIC INDIA