தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வருபவர் வைபவ். ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் தற்போது கதாநாயகனாக உருவெடுத்து உள்ளார். தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் வைபவ். இவர் நடிப்பில் வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி உள்ள ஜீனி திரைப்படம் வெளியாக இருந்த நிலையில் சில காரணங்களால் தள்ளி சென்று உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் இவர் நடிப்பில் வெளியான ரணம் படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனத்தை பெற்று உள்ளது. இதனை தொடர்ந்து படங்களை வரிசையாக நடித்து வருகிறார் வைபவ். இவர் நடிக்கும் படங்களுக்கு தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைப்பதால் தொடர்ந்து நல்ல கதைகளை கேட்டு வருகிறார். அதன்படி இவருக்கு அடுத்ததாக சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் படம் வெளியாக உள்ளது.

இயக்குனர் விக்ரம் ராஜேஸ்வர் மற்றும் அருண் இணைந்து இப்படத்தினை இயக்கி உள்ளனர். இமான் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். இப்படத்தில் இவருடன் அதுல்யா ரவி , மணிகண்டன் ராஜேஷ், ஆனந்தராஜ் , மொட்டை ராஜேந்திரன் என பலரும் நடித்து உள்ளனர். இப்படத்தின் டீசரை தற்போது படக்குழு வெளியிட்டு இருக்கிறது . டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.
Embed Video Credits : BTG UNIVERSAL OFFICIAL