அடேங்கப்பா GOAT படத்தின் ரன் டைம் இவ்வளவா..! படத்திலிருந்து கெட்டவார்த்தைகள் நீக்கம்..! வெளியான சென்சார் சர்டிபிகேட்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது. பிற நடிகர்களுக்கு படங்கள் வசூல் நூறு கோடி என்பது கனவாக இருக்கும் நிலையில், தளபதி விஜயின் படம் வெளியான ஓரிரு நாட்களில் நூறு கோடி வசூலை தொடுவது எளிதான ஒன்றாக உள்ளது. இதனால் தயாரிப்பாளர்கள் தளபதி வீட்டு வாசலில் காத்து வருகின்றனர்.

அடேங்கப்பா GOAT படத்தின் ரன் டைம் இவ்வளவா..! படத்திலிருந்து கெட்டவார்த்தைகள் நீக்கம்..! வெளியான சென்சார் சர்டிபிகேட்..! 1

விளம்பரம்

தற்போது இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து உள்ளார். இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் இவருடன் நடிகை சினேகா , மீனாட்சி சௌத்திரி, மோகன் , பிரசாந்த் , பிரபுதேவா என பல நடிகர்கள் உள்ளனர்.ஏஜிஎஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார்.

அடேங்கப்பா GOAT படத்தின் ரன் டைம் இவ்வளவா..! படத்திலிருந்து கெட்டவார்த்தைகள் நீக்கம்..! வெளியான சென்சார் சர்டிபிகேட்..! 3

விளம்பரம்

வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. அண்மையில் படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்று இருந்தது. இப்படத்திற்கு இவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்து இருக்கும் நிலையில், படத்தின் நீளம் 3 மணி நேரம் என தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது சென்சார் சர்டிபிகேட் வெளியாகி உள்ளது.

விளம்பரம்

Leave a Comment