தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமில்லாமல் உலக சினிமா ரசிகர்கள் கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு அடுத்ததாக இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படம் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்து உள்ளனர். அக்டொபர் 10ஆம் தேதி ரிலீஸ் தேதியை லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறது.

இப்படத்தை தொடர்ந்து இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையில் சன்பிக்சர் நிறுவனம் தயாரிப்பில் இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாகும் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் கன்னட நடிகர் உபேந்திரா ஒப்பந்தமாகி உள்ளார். இவர் வில்லனாக நடிக்கலாம் என கூறப்படுகிறது.இதனால் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். மேலும் இப்படத்தில் இன்னும் அதிக முன்னணி நடிகர்கள் ஒப்பந்தமாகலாம் என கூறப்படுகிறது.