கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா..! மயங்கி விழுந்த மகன் சண்முகபாண்டியன் தற்போதைய நிலை என்ன?

சினிமா உலகில் முன்னணி நடிகராக ஜொலித்தவர் நடிகர் விஜயகாந்த். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது. பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவில் கொடுத்து இருப்பவர் இவர். தனது வாழ்நாளில் தமிழ் படங்களில் மட்டுமே நடித்து உள்ளவர் கேப்டன். நடிகர் சங்க தலைவராக இருந்து நடிகர் சங்கத்தை கடனில் இருந்து மீட்டெடுத்து உள்ளார் இவர்.

கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா..! மயங்கி விழுந்த மகன் சண்முகபாண்டியன் தற்போதைய நிலை என்ன? 1

விளம்பரம்

பின்னர் அரசியல் கட்சி தொடங்கி குறுகிய காலத்திலேயே எதிர்கட்சி தலைவர் என்ற அந்தஸ்தினை பெற்று இருந்தார் விஜயகாந்த். கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை சரி இல்லாமல் இருந்த இவர் திரைப்படங்கள் நடிப்பதில் இருந்தும் , கட்சி விவகாரத்தில் இருந்தும் விலகி இருந்தார். பின்னர் கடந்த ஆண்டு உடல்நல குறைவால் நடிகர் விஜயகாந்த் உயிரிழந்து உள்ளார்.

கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா..! மயங்கி விழுந்த மகன் சண்முகபாண்டியன் தற்போதைய நிலை என்ன? 3

விளம்பரம்

நேற்று அவரின் 72வது பிறந்தநாளை கோலாகலமாக நினைவிடத்தில் கொண்டாடி இருந்தனர். அப்போது தந்தையை நினைத்து தேம்பி அழுத அவரது மகன் சண்முகபாண்டியன் திடீரென மயங்கி விழுந்தார். அவரை அங்கிருந்த மருத்துவமனையில் அனுமதித்து இருந்தனர்.தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கிருந்து வீடு திரும்பி உள்ளார்.

விளம்பரம்

Leave a Comment