உடல்நல குறைவால் காலமானார் நடிகர் பிஜிலி ரமேஷ்..! சோகத்தில் ரசிகர்கள்..!

பிராங்க் சேனல் மூலம் பிரபலமாகியவர்தான் பிஜிலி ரமேஷ். இந்த நிகழ்ச்சி உலகளவு வைரலானதை தொடர்ந்து இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உருவாகி இருக்கிறது. மீம்ஸ்கள் மூலம் இவரை மிகப்பெரிய அளவு ஒரே நாளில் நெட்டிசன்கள் பிரபலம் ஆக்கி உள்ளனர். இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் படவாய்ப்புகள் வரவே அதனையும் பயன்படுத்தி நடித்தார்.

உடல்நல குறைவால் காலமானார் நடிகர் பிஜிலி ரமேஷ்..! சோகத்தில் ரசிகர்கள்..! 1

விளம்பரம்

நட்பே துணை, கோமாளி, ஜாம்பி என பல படங்களில் நடித்து உள்ளார் பிஜிலி. நாளடைவில் சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கியது. மேலும் தொடர் குடிப்பழக்கத்தால் பாதிக்கப்பட்ட பிஜிலி, வீட்டில் படுத்தப்படுக்கையாக கிடந்தார். மேலும் குடியால் தனது வாழ்க்கை இதுபோல் ஆகிவிட்டதாக பிஜிலி பல சேனல்களுக்கு பேட்டி கொடுத்து இருக்கிறார்.

உடல்நல குறைவால் காலமானார் நடிகர் பிஜிலி ரமேஷ்..! சோகத்தில் ரசிகர்கள்..! 3

விளம்பரம்

இந்நிலையில் உடல்நலக்குறைவால் பிஜிலி ரமேஷ் இன்று அதிகாலை உயிரிழந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த செய்தி ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

விளம்பரம்

Leave a Comment