
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ராஜூரி மாவட்டத்தின் அருகே பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்டுள்ள பிஏடி (எல்லை சேவை பிரிவு ) நடவடிக்கையை சுந்தர்பானி செக்டரில் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக நாத்துவா கா திபா என்ற இடத்தில் இந்திய ராணுவம் முறியடித்து சாதனை படைத்துள்ளது.
சிறப்பு சேவை பிரிவைச் சேர்ந்தவர்கள் கமாண்டோ வீரர்கள் என்று அழைப்பார்கள். இவர்கள் ராக்கெட் லாஞ்சர், பீரங்கி குண்டுகளை வீசியும் பாகிஸ்தான் தரப்பில் தாக்குதல் தொடுத்தனர். இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்தது. இதில் பாகிஸ்தானை சேர்ந்த கமாண்டோ படை வீரர்கள் இருவர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில், இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்ததால் அவர்கள் பின்வாங்கினர். துப்பாக்கிச் சண்டையில் 21 வயது இளம் ராணுவ வீரர் சுக்வீந்தர் சிங் வீரமரணம் அடைந்தார்.பாகிஸ்தானின் ஊடுருவல் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்திய ராணுவம் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளது.