என் கதையை Mariselvaraj திருடிவிட்டார்..! வாழை என்னுடைய கதை..! எழுத்தாளர் பரபரப்பு புகார்..!

தமிழ் சினிமா கொண்டாடும் இயக்குனர்களில் ஒருவர்தான் மாரிசெல்வராஜ். பரியேறும் பெருமாள் என்ற தரமான படத்தை தமிழ் சினிமாவுக்கு கொடுத்து இன்று முன்னணி இயக்குனராக இவர் உருவெடுத்து இருக்கிறார். இவர் இயக்கிய கர்ணன், மாமன்னன் போன்ற படங்கள் அடுத்தடுத்து சமூகம் சார்ந்த பிரச்சனைகளை எடுத்து சொல்லி வரவேற்பினை பெற்று இருந்தது. இதனால் மாரிசெல்வராஜ் இயக்கத்திற்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவாகி இருக்கிறது.

என் கதையை Mariselvaraj திருடிவிட்டார்..! வாழை என்னுடைய கதை..! எழுத்தாளர் பரபரப்பு புகார்..! 1

விளம்பரம்

தற்போது இவர் தனது சிறுவயதில் நடந்த சமபவத்தை மையமாக கொண்டு வாழை படத்தை இயக்கி உள்ளார். இப்படம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்று இருந்தது. இப்படத்திற்கு மக்கள் தொடர்ந்து தங்களது ஆதரவுகளை கொடுத்து வருகின்றனர். விமர்சனம் மற்றும் வசூலிலும் இப்படம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கும் நிலையில்,அண்மையில் படக்குழுவினருடன் இந்த வெற்றியை கொண்டாடி இருந்தார்.

என் கதையை Mariselvaraj திருடிவிட்டார்..! வாழை என்னுடைய கதை..! எழுத்தாளர் பரபரப்பு புகார்..! 3

விளம்பரம்

இந்நிலையில் சோ தர்மன் என்ற எழுத்தாளர் மாரிசெல்வராஜ் மீது புகார் கொடுத்து உள்ளார். அதில் 10ஆண்டுகளுக்கு முன்பு தான் எழுதிய வாழையடி என்ற கதையைதான் இயக்குனர் காப்பி அடித்து படமாக எடுத்து இருப்பதாக புகார் அளித்து உள்ளார். சாகித்ய அகாடமி விருது வாங்கிய எழுத்தாளர் இயக்குனர் மீது புகாரளித்து இருப்பது , இயக்குனர் மார்செல்வராஜ் ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தி இருக்கிறது.

விளம்பரம்

Leave a Comment