பேய்க்கு பயப்படமாட்டேன் என கூறிய விஜயா..! விஜயாவை பேய் குரலில் பயமுறுத்திய ஸ்ருதி..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. நாளுக்கு நாள் தொடருக்கான ரசிகர்கள் கூட்டமானது அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது தொடரின் புதிய ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை மிகப்பெரிய சிரிப்பலையில் ஆழ்த்தி இருக்கிறது. ஸ்ருதி உடன் சேர்ந்து இரவில் மீனா பேய் படம் பார்க்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பேய்க்கு பயப்படமாட்டேன் என கூறிய விஜயா..! விஜயாவை பேய் குரலில் பயமுறுத்திய ஸ்ருதி..! 1

விளம்பரம்

பேய் படத்தை பார்த்து பயந்து மீனா சத்தம் போடவே, அதை கேட்டு வந்த விஜயா மீனாவை பயங்கரமாக திட்டுகிறார். மேலும் ஸ்ருதி விஜயாவிடம் , பேய்க்கு பயப்படமாட்டீங்களா என கேள்வி எழுப்பவே, அதெற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன் என கூறுகிறார் விஜயா. இதனால் ஸ்ருதி மீனாவுடன் சேர்ந்து திட்டம் தீட்டி விஜயாவை பயம் காட்ட முயற்சி செய்கிறார்.

பேய்க்கு பயப்படமாட்டேன் என கூறிய விஜயா..! விஜயாவை பேய் குரலில் பயமுறுத்திய ஸ்ருதி..! 3

விளம்பரம்

விஜயாவின் அறைக்கு வெளியே ஸ்ருதி பேய் போல குரல் எழுப்பவே அதனை கண்டு விஜயா அஞ்சி நடுங்குகிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது. விஜயாவை ரசிகர்களை கலாய்த்து வருகின்றனர். அந்தளவிற்கு ப்ரோமோ ரசிகர்களை கவர்ந்து இருக்கிறது.

தொடர்புடையவை  பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த கதிரவன் காதலி.! மனம் உடைந்து அழும் ஷிவின்.! பிக்பாஸ் ப்ரோமோ.!

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

விளம்பரம்

Leave a Comment