விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த தொடருக்கென மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. முன்னணி ஹிட் தொடர்கள் வரிசையில் சிறகடிக்க ஆசை தொடரும் இணைந்து கலக்கி வருகிறது. நாளுக்கு நாள் தொடரின் சுவாரசியம் அதிகரித்து வருவதால் ரசிகர்கள் கூட்டமும் இந்த தொடருக்கு அதிகரித்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. ப்ரோமோவில், ஸ்ருதி அம்மா , மீனாவிடம் வந்து முத்துவை பற்றி தவறாக பேசுகிறார். இதனால் கடுப்பாகிய மீனா அவரை திட்டி அனுப்புகிறார். மேலும் இதை பற்றி முத்துவிடம் சொல்லவே, கடுப்பாகிய முத்து கோவமாக வீட்டுக்கு வருகிறார். அங்கு ஸ்ருதி உடன் சண்டை போடுகிறார். பதிலுக்கு ரவியும் சண்டையிடுகிறார்.

இதனால் விஜயா மகிழ்ச்சியாக உள்ளார்.ஆனால் முத்து மற்றும் ரவி இணைந்து அம்மாவுக்காக போலியாக சண்டையிட்டு நடித்து கொள்கின்றனர். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. மேலும் விஜயாவை, முத்து சூப்பராக ஏமாற்றியதாக ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Embed Video Credits : VIJAY TELEVISION