ஹேமா கமிட்டி குழுவில் தற்போது மலையாள சினிமா நடிகைகள் பலரும் தங்களுக்கு நடைபெற பாலியல் வன்முறைகள் குறித்து புகார்கள் கொடுத்து வருகின்றனர். இதன்மூலம் பல முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மலையாள சினிமாவில் நடந்து இருக்கும் இதுபோன்ற சம்பவம் நாடுமுழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

பல நடிகைகளும் இதற்கு ஆதரவு அளித்து வருகின்றனர். மேலும் தங்களுக்கு நடந்த அனுபவங்களையும் வெளியே கூறி வருகின்றனர். ஹேமா கமிட்டிக்கு தமிழ் சினிமா நடிகர்களும் தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது தனது வேட்டையன் படத்துடன் கங்குவாவை மோதவிடாமல் தள்ளிவைத்ததற்கு நன்றி தெரிவித்து உள்ளார்.

மேலும் ஹேமா கமிட்டி குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நடிகர் ரஜினிகாந்த், அதை பற்றி தனக்கு எதுவும் தெரியாது எனவும், கையை தூக்கி கும்பிட்டு அங்கிருந்து கிளம்பி உள்ளார். ஒரு முன்னணி நடிகர் நடிகைகளுக்கு ஆதரவாக எதுவும் பேசாமல் சென்று இருப்பது நெட்டிசன்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.