தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் நடிகர்களில் ஒருவர் விஜய். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் படை உள்ளது. பிற நடிகர்களுக்கு தங்களது படம் நூறு கோடியை தொடுவது கனவாக இருக்கும் நிலையில், தளபதி விஜய் படத்தின் ஒரு நாள் வசூல் தான் நூறு கோடியாக இருக்கும். அந்த அளவுக்கு தமிழ் சினிமா மட்டுமில்லாமல் மலையாளம் ,தெலுங்கு சினிமாவில் மார்க்கெட்டை கொண்டு இருக்கிறார்.

இவர் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து உள்ளார். இப்படத்தில் இவருடன் சினேகா , மீனாட்சி , பிரபுதேவா , மைக்மோகன் பிரசாந்த் ஆகியோர் நடித்து உள்ளனர். இப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடை போட்டு வருகிறது.

தற்போது இப்படத்தை நேற்று அடையாறில் உள்ள திரையரங்கில் நடிகர் விஜய், தனது மனைவி, பிள்ளைகள் மற்றும் பெற்றோருடன் கோட் படத்தை பார்த்து உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மனைவி உடன் கருத்துவேறுபாடால் விஜய் பிரிந்து விட்டதாக செய்திகள் வெளியாகி இருக்கும் நிலையில், மனைவியுடன் திரையரங்கு வந்து அதற்கு முற்றுப்புள்ளி வைத்து உள்ளார்.