GOAT-க்கு டிக்கெட் கிடைக்கல..! புலம்பி தள்ளிய பிரபல கிரிக்கெட் வீரர்..!

தளபதி விஜய் நடிப்பில் மாபெரும் எதிர்பார்ப்பில் இன்று வெளியாகி இருக்கும் படம் கோட். இப்படத்தில் இவருடன் சினேகா, லைலா , மோகன், பிரபுதேவா, பிரசாந்த் என பல நடிகர்கள் நடித்து உள்ளனர். இப்படம் தமிழகத்தில் மட்டுமில்லாமல் கேரளா , கர்நாடகாவிலும் நல்ல விமர்சனத்தை ரசிகர்களிடம் பெற்று இருக்கிறது. முன்பதிவு தொடங்கிய நாள் முதலே பல திரையரங்குகளில் டிக்கெட்டுகள் விற்பனை முடிந்துவிட்டது.

GOAT-க்கு டிக்கெட் கிடைக்கல..! புலம்பி தள்ளிய பிரபல கிரிக்கெட் வீரர்..! 1

விளம்பரம்

இதனால் டிக்கெட் இல்லாமல் ரசிகர்கள் பெரும் கவலையில் இருந்து வருகின்றனர். முன் பதிவிலும் படம் நூறு கோடிக்கு மேல் வசூலை பெற்று இருக்கலாம் என கூறப்படுகிறது. காரணம் தமிழகம் முழுவதும் கூடுமான அளவு திரையரங்குகளில் படம் வெளியாகி உள்ளதால் அனைத்து காட்சிகளும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக மாறி உள்ளது. இந்நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் ஆன வருண் சக்ரவர்திக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என சமூகவலைத்தளத்தில் புலம்பி இருக்கிறார்.

GOAT-க்கு டிக்கெட் கிடைக்கல..! புலம்பி தள்ளிய பிரபல கிரிக்கெட் வீரர்..! 3

விளம்பரம்

முதல் நாள் காட்சிக்கு டிக்கெட் எடுக்க நினைத்த வருணுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை, இதனால் தான் முயற்சி செய்தும் டிக்கெட் கிடைக்கவில்லை எனவும் , இதனால் படத்தை பார்க்க முடியாது எனவும் கூறி படக்குழுவுக்கு வாழ்த்துக்களை மட்டும் கூறி உள்ளார்.

விளம்பரம்

Leave a Comment