சிறுவர்கள் முதல் இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் வரை அனைவரையும் ரசிகர்களாக கொண்ட நடிகர் விஜய். தனது படத்தின் மூலம் பலரையும் தனது தீவிர ரசிகர் ஆக்கி இருக்கிறார் விஜய். தற்போது அரசியல் கட்சி தொடங்கி இருக்கும் இவர் சினிமாவை விட்டுவிட்டு அரசியலில் களம் இறங்க இருக்கிறார். இவ்வளவு பெரிய மார்க்கெட்டை கொண்ட நடிகர் விஜய் நடிப்பை விட்டு வெளியேருவது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து உள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் கோட். இப்படத்தில் இவருடன் நடிகை சினேகா,மீனாட்சி,மோகன், பிரபுதேவா, பிரசாந்த் ஆகியோர் நடித்து உள்ளனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.

இப்படத்தின் முன்பதிவு தொடங்கிய சில நேரங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனை ஆகி இருக்கிறது. படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே முன்பதிவில் சாதனை படைத்த கோட் திரைப்படம் தற்போது வெளியாகி ஒரே நாளில் உலகளவில் ரூ .95 கோடி முதல் ரூ . 100 கோடி வரை வசூலித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது அதிகாரபூர்வ தகவல் இல்லை என்றாலும் விரைவில் படத்தயாரிப்பு நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.