நிதித்துறை பிரச்சனையே பொருளாதார மந்த நிலைக்கு காரணம்: கீதா கோபிநாத்

இந்தியாவின் பொருளாதார மந்த நிலைக்கு நிதித் துறையில் உள்ள சில சிக்கல்கள் தான் காரணம் என்ன சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பொருளாதாரம் எப்போதும் இல்லாத அளவிற்கு மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. இங்கே ஏற்பட்டுள்ள நுகர்வு வீழ்ச்சி, தனியார் முதலீடுகள் பற்றாக்குறை மற்றும் மந்தமான ஏற்றுமதி உள்ளிட்ட பல பிரச்சனைகளால் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிந்துள்ளன. அதிலும் நூற்றாண்டில் ஐந்து சதவிகிதமும், செப்டம்பர் மாதத்தில் 4.5 சதவிகிதமாக வீழ்ச்சி கண்டுள்ளது.

விளம்பரம்
நிதித்துறை பிரச்சனையே பொருளாதார மந்த நிலைக்கு காரணம்: கீதா கோபிநாத் 1

இதுகுறித்து கீதா கோபிநாத் கூறுகையில், “இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சி காணும் என்றே அனைத்து தரப்பினரும் மதிப்பாய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியா குறித்து வரும் தரவுகளை ஆராயும்போது ஜனவரி மாதத்தில், எங்களுடைய தரவுகள் மீண்டும் திருத்தி கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்” என தெரிவித்தார்.

கடந்த அக்டோபர் மாதத்தில் இந்தியா 6.1 சதவிகித வளர்ச்சியை காணும் என்று கணிக்கப்பட்டது அதேபோல 2020இல் 7 சதவீதமாக உயரும் என்றும் கூறப்பட்டது. இதுகுறித்து கீதா கூறுகையில், 2025 ஆம் ஆண்டு 5 ட்ரில்லியன் டாலர் இலக்கினை அடைய இந்திய அரசாங்கத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த இலக்கினை அடைய கூடிய சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாக இருக்கின்றது என்றும் கூறியுள்ளார்.

விளம்பரம்
தொடர்புடையவை  தாக்குதலை முறியடிக்க தயாராக இருக்க வேண்டும்: சிதம்பரம்

மேலும் “இந்தியாவின் நிதி நிலை நடப்புக் கணக்கு பற்றாக்குறையானது 3.4 சதவிகிதத்தை மீறும் என எச்சரித்துள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் கார்ப்பரேட் வரி விகிதத்தை மத்திய அரசு குறைத்தது. ஆனால் அந்த வருவாய் இழப்பை ஈடு செய்யும் வகையில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பற்றாக்குறை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக இந்தியாவில் ஏற்பட்டுவரும் பொருளாதார மந்த நிலைக்கு அந்நாட்டின் நிதித்துறையும் ஒரு முக்கிய காரணமாக இருக்கின்றன. இதனை விரைவாக சரிசெய்ய வேண்டும்.

அதேபோல கிராமப்புற வருவாய் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் காரணங்களை கண்டறிந்து தீர்வு காணப்பட வேண்டும். மேலும் பண்ணை உற்பத்தியாளர்களின் திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில் இந்தியாவில் உற்பத்தி திறன் அது உலகளாவிய உற்பத்தி திறனுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவாகவே இருக்கிறது. எனவே விவசாயத்துறையில் உற்பத்தியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment