சிறுவர்கள் முதல் இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் வரை அனைவரையும் ரசிகர்களாக கொண்ட நடிகர் விஜய். தனது படத்தின் மூலம் பலரையும் தனது தீவிர ரசிகர் ஆக்கி இருக்கிறார் விஜய். தற்போது அரசியல் கட்சி தொடங்கி இருக்கும் இவர் சினிமாவை விட்டுவிட்டு அரசியலில் களம் இறங்க இருக்கிறார். இவ்வளவு பெரிய மார்க்கெட்டை கொண்ட நடிகர் விஜய் நடிப்பை விட்டு வெளியேருவது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் கோட். இப்படத்தில் இவருடன் நடிகை சினேகா,மீனாட்சி,மோகன், பிரபுதேவா, பிரசாந்த் ஆகியோர் நடித்து உள்ளனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். இப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.

தற்போது இப்படத்தின் வீடியோ பாடல்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. அண்மையில் விசில் போடு பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டு இருந்தது. அதனை தொடர்ந்து தற்போது சின்ன சின்ன கண்கள் வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.
Embed Video Credits : T series tamil