விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சிக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. நான்காவது சீசன் வரை முடிந்த இந்த போட்டி தற்போது 5வது சீசனை தொடங்கி மக்களின் ஆதரவுடன் வெற்றிநடைபோட்டு வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த நிகழ்ச்சியை ரசித்து பார்த்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை ஸ்ரீகாந்த் தேவா, வசந்த் வசி மற்றும் ஜோயா எலிமினேட் ஆகியுள்ளனர். இந்த சீசனில் புதிய கோமாளியாக கெமி, அன்ஷிதா, பரீனா, ஷபனம் ஆகியோர் கலந்துகொண்டு உள்ளனர். வாரம் வாரம் புதிய புதிய முறையில் நிகழ்ச்சியை நடத்தி மக்களை மகிழ்வித்து வருகின்றனர் குக் வித் கோமாளி.. இந்த சீசனில் செப் வெங்கடேஷ் பட்க்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் வருகை தந்து உள்ளார்.

இந்த வார நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ப்ரோமோவில், இந்த வாரம் வைல்ட் கார்ட் போட்டி நடத்தப்பட்டு உள்ளது. வெளியேறிய குக் வித் கோமாளி போட்டியாளர்கள் மீண்டும் என்ட்ரி கொடுத்து அசத்தி உள்ளனர். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.
Embed Video Credits : VIJAY TELEVISION