சிக்ஸரா இல்லை டக் அவுட்டா..? லப்பர் பந்து விமர்சனம்..!

இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் இணைந்து நடித்திருக்கும் படம் லப்பர் பந்து. இப்படத்திற்கு சான் ரோல்டன் இசையமைத்து இருக்கிறார். இப்படத்தில் இவர்களுடன் காளி வெங்கட்,தேவதர்ஷினி, பாலசரவணன் மற்றும் TSK நடித்து உள்ளனர். இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இப்படத்தின் விமர்சனத்தை இங்கு காணலாம் .

சிக்ஸரா இல்லை டக் அவுட்டா..? லப்பர் பந்து விமர்சனம்..! 1

விளம்பரம்

படத்தின் கதை

ஹீரோயினிக்கு அப்பாவாகவும் சிறந்த கிரிக்கெட் பிளேயர் ஆகவும் வருகிறார் அட்டகத்தி தினேஷ். அதே போல ஒடுக்கப்பட்ட ஜாதியை சேர்ந்தவரும் கிரிக்கெட் மீது அன்பு கொண்டவரும் ஆக களம் இறங்கி இருக்கிறார் ஹரிஷ் கல்யாண். இவர்கள் இருவருக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. தான் காதலிக்கும் பெண்ணின் தந்தை என தெரியாமலேயே அட்டகத்தி தினேஷை அதிகம் சீண்டி விடுகிறார் ஹரிஷ் கல்யாண். பின்னர் காதலியின் தந்தை தான் அட்டகத்தி தினேஷ் என தெரிய வரும் நிலையில், அடுத்து என்ன நடக்கிறது என்பது தான் கதையே.

விளம்பரம்

சிக்ஸரா இல்லை டக் அவுட்டா..? லப்பர் பந்து விமர்சனம்..! 3

படத்தின் விமர்சனம்

விளம்பரம்

இருவருக்கும் இடையே உள்ள ஈகோவை மையமாக வைத்து கதையை கொண்டு சென்று இருந்தாலும், முழுக்க முழுக்க அதை மட்டுமே வைக்காமல் அவர்கள் குடும்ப கஷ்டங்கள் வாழ்க்கை முறைகளையும் இயக்குனர் நன்கு காமித்து இருக்கிறார். ஈகோவை வைத்து கதை தொடங்கினாலும், அதை சிறிது நேரத்திலேயே வேறு கோணத்தில் கொண்டு சென்று மக்களை மகிழ்வித்து இருக்கிறார் இயக்குனர் தமிழரசன். படத்தில் நடித்த எல்லா நடிகர்களுக்கும் சமமான வாய்ப்புகளை வழங்கியது படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்து இருக்கிறது. சான் ரோல்டன் இசை ரசிக்கும் படியாக இருந்ததும் படத்திற்கு பக்க பலமாக உள்ளது. அட்டகத்தி தினேஷ் வயது முதிர்ந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் தனக்கான நடிப்பை பன்மடங்கு வெளிப்படுத்தி அசத்தி உள்ளார். கிளைமாக்ஸ் காட்சிகள் இப்படித்தான் இருக்கும் என்று எதிர்பார்த்தாலும், படம் முழுவதும் ரசிக்கும் படியாக அமைந்து உள்ளது. மொத்தத்தில் இப்படம் ரசிகர்கள் மனதில் பவுண்டரியை தாண்டிவிட்டது.

விளம்பரம்

Leave a Comment