என்ன செலவு செஞ்சாலும் கேள்வி கேட்பா..! வீடியோ கால் பண்ணி பிரச்சனை பண்ணுறா..! Aarthi குறித்து பேசிய நடிகர் JayamRavi..!

ஜெயம் படத்தில் நடித்து சினிமாவுக்குள் நுழைந்து நல்ல வரவேற்பினை பெற்றவர் ஜெயம் ரவி. இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது. இவர் நடித்த தனி ஒருவன் படம் இவரின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இப்படத்தை தொடர்ந்து இவர் நடித்த மிருதன், டிக் டிக் டிக் படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் இருந்து பெற்று கொடுத்து இருக்கிறது.

என்ன செலவு செஞ்சாலும் கேள்வி கேட்பா..! வீடியோ கால் பண்ணி பிரச்சனை பண்ணுறா..! Aarthi குறித்து பேசிய நடிகர் JayamRavi..! 1

விளம்பரம்

இந்நிலையில் இவர் தனது காதல் மனைவி ஆர்த்தியை பிரிவதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தார். மேலும் விவாகரத்து கேட்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். மேலும் நேற்று முன்தினம் மனைவியிடம் இருந்து தனது உடைமைகளை மீட்டுத்தரகோரி போலீசில் ஜெயம் ரவி புகார் அளித்து உள்ளார். நாளுக்கு நாள் இவர்களுக்கு இடையேயான மோதல் அதிகரித்து வருகிறது.

என்ன செலவு செஞ்சாலும் கேள்வி கேட்பா..! வீடியோ கால் பண்ணி பிரச்சனை பண்ணுறா..! Aarthi குறித்து பேசிய நடிகர் JayamRavi..! 3

விளம்பரம்

இந்நிலையில் இவர்களுக்கு இடையேயான மோதல் குறித்து யுடியூபர் ஷா என்பவர் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் ஜெயம் ரவி வங்கி கணக்கை மனைவி ஆர்த்தி கட்டுப்பாட்டில் வைத்து இருந்ததாகவும், அவர் செலவு செய்யும் போது,அவர் மனைவிக்கு குறுஞ்செய்தி செல்வதால்,தனது அஸிஸ்டன்டை தொடர்புகொண்டு என்ன செலவு செய்கிறார் என ஆர்த்தி கேட்பார் எனவும், அது தனக்கு அசிங்கமாக இருந்ததாக ஜெயம் ரவி தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார். மேலும் ஷூட்டிங்கிற்காக வெளியூரில் இருக்கும் பொழுது ஆர்த்தி போன் செய்து , தன்னுடை அறையில் யார் இருக்கிறார்கள் என விசாரிப்பதாகவும் அவர் கூறியதாக ஷா தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

Leave a Comment