நடிகர் சசிகுமார் நடிக்கும் நந்தன் படத்தின் காளை வருது பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த பாடலை முத்து சிற்பி பாடியுள்ளார , ஜிப்ரான் இசையமைத்து உள்ளார். இந்த பாடலை இரவி எழுதியுள்ளார். இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ள நிலையில் தற்போது இப்படத்தின் வீடியோவை வெளியிட்டு இருக்கிறது படக்குழு. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது .

நடிகர் சசிகுமாருக்கு கருடன் படத்தின் வெற்றிக்கு பிறகு வெளியாகும் அடுத்தபடம் நந்தன். இப்படத்திற்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.இப்படத்தை இரா சரவணன் எழுதி இயக்கி உள்ளார். இப்படம் முதலில் நடிகர் சூரிக்கு எழுதப்பட்ட கதை எனவும், அவர் விடுதலை படத்தில் பிசியாக இருந்ததால் நடிகர் சசிகுமார் ஒப்பந்தமாகி இருப்பதாகவும் இயக்குனர் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார்.

இப்படம் பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகி திரையரங்கில் வெற்றிநடைபோட்டு வருகிறது. ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர். சசிகுமார் நடிப்பினை ரசிகர்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர். நந்தன் படத்தின் வெற்றிக்கு பிறகு சசிகுமார் அடுத்தடுத்து படங்களில் அதிக கவனம் செலுத்தி பிசியாக நடித்து வருகிறார்.
Embed Video Credits : THINK MUSIC INDIA