பிரபல யுடியூபராக வலம் வருபவர் TTF வாசன். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. இந்த ரசிகர்கள் கூட்டம் தான் இவரின் பிரச்சனையே எனலாம். ஆரம்பத்தில் இவர் நடத்திய ரசிகர்கள் சந்திப்பில் அளவுக்கு மீறி கூடிய ரசிகர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அனுமதி இல்லாமல் ரசிகர் சந்திப்பு நடத்திய டிடிஎப் வாசன் மீது போலீசில் புகார் கொடுக்கபட்டு இருந்தது.

அன்று தொடங்கிய இந்த பிரச்சனை தற்போது வரை வாசனுக்கு நீடித்து வருகிறார். வாசன் விதிமுறைகளை மீறும் பொழுது போலீசார் அடிக்கடி அவரை கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். அண்மையில் இவர் ஏற்படுத்திய விபத்தால், இவரது லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் தற்போது காரை மட்டும் இயக்கி வருகிறார் வாசன்.

மேலும் மஞ்சள் வீரன் எனும் படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருந்தார். இப்படத்தை இயக்குனர் செல்லம் இயக்க இருந்தார். இந்நிலையில் இன்று இயக்குனர் அளித்த பேட்டியில், மஞ்சள் வீரன் படத்தில் இருந்து TTF வாசன் நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். அவர் படம் நடிக்க ஒத்து வரமாட்டார் எனவும், அதனால் அவரை படத்தில் இருந்து நீக்குவதாகவும் தெரிவித்துள்ளார்.