நடிகை Vanitha Vijayakumar – Robert மாஸ்டர் திருமணம்..! இணையத்தில் வைரலாகும் திருமண பத்திரிக்கை..!

பிரபல நடிகர் விஜயகுமார் மகள் வனிதா விஜயகுமார். சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிய இவருக்கு பெரும் வரவேற்பு சினிமாவில் கிடைக்கவில்லை. இதனால் சினிமாவை விட்டு விலகி இருந்த இவர், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அதிரடியாக என்ட்ரி கொடுத்தார். இந்த நிகழ்ச்சியில் அனைவரிடமும் சண்டையிட்டு மக்களை கவர்ந்து இருந்தார் வனிதா. பின்னர் இவர் கலந்துகொண்ட பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவர் ரம்யாகிருஷ்ணனிடம் சண்டையிட்டு அங்கிருந்தும் வெளியேறினார்.

நடிகை Vanitha Vijayakumar - Robert மாஸ்டர் திருமணம்..! இணையத்தில் வைரலாகும் திருமண பத்திரிக்கை..! 1

விளம்பரம்

இவர் ஏற்கனவே இரண்டு திருமணங்கள் செய்த நிலையில், மூன்றாவதாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து இருந்தார். இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்த நிலையில் அவரை விட்டும் பிரிந்தார் வனிதா. தற்போது தனியாக குழந்தைகளை பார்த்துக்கொண்டு வரும் இவர் மீண்டும் தனக்கு திருமணம் என கூறி சினிமா வட்டாரத்தில் புயலை கிளப்பி உள்ளார்.

நடிகை Vanitha Vijayakumar - Robert மாஸ்டர் திருமணம்..! இணையத்தில் வைரலாகும் திருமண பத்திரிக்கை..! 3

விளம்பரம்

பிக் பாஸ் நிகழ்ச்சி போட்டியாளரும், டான்ஸ் மாஸ்டருமான ராபர்ட் மாஸ்டர் உடன் திருமணம் என புகைப்படம் வெளியிட்டு உள்ளார். இது மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.மீண்டும் திருமணமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இருவரும் இணைந்து நடித்துள்ள மிஸ்டர் அன்ட் மிஸஸ் படத்திற்காக செய்யபட்ட புதிய ப்ரோமோஷன் இது ஆகும். இதனால் தற்போது ரசிகர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

விளம்பரம்

Leave a Comment