தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் கொடிகட்டி பறந்த நடிகைதான் மீனா. தனது நடிப்பால் அசத்தி இளைஞர்களை கவர்ந்து மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை தற்போது வரை சேர்த்து வைத்து உள்ளார். கண்ணழகி என்று தமிழ் சினிமாவில் பெயர் எடுத்து உள்ளவர் மீனா. பல வெற்றிப்படங்களில் நடித்து கொடுத்து தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து இன்று முன்னணி நடிகையாக உயர்ந்து உள்ளார். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் மலையாள சினிமா வரை பல முன்னணி நடிகர்களுடனும் நடித்து உள்ளார்.

தற்போது இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியது போல தனது மகளையும் தெறி படத்தில் அறிமுகம் செய்து வைத்து உள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்னர் இவரது கணவர் கொரோனா தாக்குதலால் உயிரிழந்து உள்ளார். தற்போது நடிகை மீனா அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கிறார். மேலும் படங்களில் நடிக்க தொடங்கி உள்ளார் மீனா.

இந்நிலையில் , இவர் அண்மையில் கலந்துகொண்ட விருது வழங்கும் நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பொழுது, அவரை செய்தியாளர் ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் பேச கூறியுள்ளார். இதனை கேட்டு கடுப்பாகிய மீனா, நான் தமிழ் நடிகை அப்போ என்ன எதுக்கு அழைத்தீர்கள் என காட்டமாக பதில் கொடுத்து உள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.